பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!! நம் பூமியை காப்போம் !!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!! நம் பூமியை காப்போம் !! பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பொருள் பெற்றோலிய வேதிப்பொருட்களிலிருந்து பெறப்படும் ஒரு பொருளாகும். இன்றைய தலைமுறையினது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் பொருட்கள் மாறிவிட்டன . இப்பொருட்கள் பிற குப்பைகளைப் போல் மண்ணில் உக்கும் தன்மையற்றது. ஒரு பிளாஸ்டிக் பை மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகளாகுமென விஞ்ஞானம் சொல்கிறது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீமைகள் பின்வருமாரு: குப்பைகளுடன் சேர்ந்து எரியும்பொழுது நச்சுத்தன்மையான வாயுக்களை வெளிப்படுத்துகின்றது . பிளாஸ்டிக் கழிவுகள் புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களை ஏட்படுத்துகிறது. மலட்டுத்தன்மையை உருவாக்கும் ஹோர்மோன் செயட்பாட்டினை தூண்டுகிறது. மழைநீர் உறிஞ்சப்படுவதை தடுப்பதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வழிவகுக்கிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கி 50 ஆண்டுகளேயாகின்றது . அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு நிலத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை . கடல்வாழ் உயிரினங்களான வகை வகையான மீன்கள் , சுறாக்கள் மற்றும் கடலாமைகள் போன்றவையின