பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!! நம் பூமியை காப்போம் !!


பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!!  நம் பூமியை காப்போம் !!

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப்பொருள் பெற்றோலிய வேதிப்பொருட்களிலிருந்து பெறப்படும் ஒரு பொருளாகும். இன்றைய தலைமுறையினது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் பொருட்கள் மாறிவிட்டன . இப்பொருட்கள் பிற குப்பைகளைப் போல் மண்ணில் உக்கும் தன்மையற்றது. ஒரு பிளாஸ்டிக் பை மண்ணோடு மண்ணாகி அழிய 400  ஆண்டுகளாகுமென விஞ்ஞானம் சொல்கிறது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் விளையும் தீமைகள் பின்வருமாரு: 

  • குப்பைகளுடன் சேர்ந்து எரியும்பொழுது நச்சுத்தன்மையான வாயுக்களை வெளிப்படுத்துகின்றது . 
  • பிளாஸ்டிக் கழிவுகள் புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களை ஏட்படுத்துகிறது. 
  • மலட்டுத்தன்மையை உருவாக்கும் ஹோர்மோன் செயட்பாட்டினை தூண்டுகிறது. 
  • மழைநீர் உறிஞ்சப்படுவதை தடுப்பதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வழிவகுக்கிறது. 

இந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்த துவங்கி 50  ஆண்டுகளேயாகின்றது . அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு நிலத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை . கடல்வாழ்  உயிரினங்களான வகை வகையான மீன்கள் , சுறாக்கள் மற்றும் கடலாமைகள் போன்றவையின் இனப்பெருக்கமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைவிட மிக கொடுமையான விடயமென்னவென்றால் பொலிதீன் பைகலில் பொதி செய்த உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு அவ்விடத்திலேயே எறிந்து விட்டு செல்கின்றோம். ஆனால் வயிற்றுக்குள் போகும் அவ்வுணவுடன் இரசாயன பதார்த்தங்களும் சேர்ந்தே செல்கின்றதென்பதை மறந்து விடுகிறோம் . 

ஒவ்வொரு முறையும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் போதும் காசு கொடுத்து நோயை வாங்கவேண்டுமா? என்று சிந்தியுங்கள் . அணுகுண்டை விடவும் ஆபத்தான இவ்வகையான  பிளாஸ்டிக் பொருட்களை பாவிப்பதனால் அது எம்மை விட எமது எதிர்கால சந்ததியினரையே மிகவும் பாதிக்கின்றதென்பதை உணருங்கள் . உலகில் அதிகளவு பிளாஸ்டிக் பிரயோகிக்கும் நாடுகள் வரிசையில் நம் நாடான இலங்கை  5ஆம் இடத்தை வகிக்கின்றதென்பதை நீங்கள் அறிவீர்களா ? எனவே இன்னும் தாமதிக்காமல் பிளாஸ்டிக் பிரயோகத்தை தடுப்போம் . அல்லது பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவோம். இது காலம் கடந்த எச்சரிக்கையென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக சூழலுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய பொருட்களை பயன்பாட்டில் கொண்டு வருவோம் . எமக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் நெகிழி ஒழிப்பு போராளியை உறக்கத்தை விட்டு எழுப்புவோம். நம் பூமியை காப்போம்.


“Let’s say no to single use plastic!!
Let's save our earth “

What is plastic? Plastics are typically organic polymers of high molecular mass commonly derived from petrochemicals. Plastic products have become a part of the life of today’s generation. These materials cannot be decomposed as other wastes. Science says that, a plastic bag takes around 400 years to decompose into soil. Disadvantages of single use plastics are:
  • Emissions of toxic gases when burned along with garbage. 
  • Plastic waste can cause serious diseases such as cancer.
  • Stimulates the activity of the hormone that may cause reduction in the fertility rate.
  • It prevents the absorption of rain water into soil, which effects the ground water recharge.
It has been more than 50 years, since the widespread use of these plastics. The worst thing is the fact that, we’re even packing the foods that we eat in polythene bags and throwing them away after eating them. Realize that when we use this single use plastic material which is more dangerous than the atomic bomb, it affects our future generations the most. Did you know that our own country Sri Lanka is the 5th largest user of plastic in the world? So let’s prevent the use of plastics without further delay or recycle them once it’s used. Let’s wake up the sleeping anti- plastic warrior within us. Let’s save our planet together.

Penned by: Akeela Banu

Comments

Popular posts from this blog

පහේ කල්ලිය නොහොත් රන්දි ගෙදර ලමයි

රඹුක්පොත හොල්මන් වලව්වේ බෝඩිම - Dandelions

මෙය ඇගේ කතාව නොවේ, ඇගේ මරණයේ කතාව යි