Iconic Batik
Batik is an ancient Egyptian art form with a long and illustrious history. It is almost 2000 years old and gained popularity in the 7th century among the peoples of Persia, China, India, Japan, and South Asia.There is evidence that this art was created in harmony with nature by the people of Java Island, and they continue to work in the batik industry today. They developed a batik art that was unique to them, based on conventional wax batik art, and it is now widely known as Java batik.
Sri Lankan batik art has a long history as well. They woven garments and painted in the rock caves, according to legend, using colors made from locally available plants, roots, nuts, and bark. In Sri Lanka, however, we have inherited a particular batik art culture that has been passed down through the generations. There are numerous challenges to preserving this cultural heritage as an art form. The batik business faces a number of challenges, including a shortage of experienced labor, high raw material costs, limited utilization of contemporary technology, and a lack of a market for the product. Batik will be one of the primary businesses that may be leveraged to increase the economy if these challenges can be solved.ඉතා පැරණි ඉතිහාසයකට උරුමකම් කියන බතික් නිර්මාණ කලාව ඇරඹී පුරාණ ඊජිප්තුව ආශ්රිතව ආරම්භ වූ කලාවක් ලෙස ඉතිහාසයේ සදහන් ය..මෙය වසර 2000 කට වඩා පැරණි අතර පර්සියාව , චීනය , ඉන්දියාව , ජපානය සහ දකුණු ආසියානු වැසියන් අතර 07 වන සියවසේදී පමණ ප්රචලිත විය.
ජාවා දුපත් වැසියන් අතරද මෙම කලාව සොබාදහමට අනුගතව පැවති බවට සාක්ෂි පවතින අතර කර්මාන්තයක් වශයෙන් අදටත් ඔවුන් මෙම කර්මාන්තයේ රැඳී සිටී. සාම්ප්රදායික ඉටි බතික් කලාවේ ලක්ශණ උකහා ගනිමින් ඔවුන් ඔවුනට අනන්ය වූ බතික් කලාවක් නිර්මාණය කල අතර එය ඉතා සාර්ථක ව වර්ථමානයේ ජාවා බතික් ලෙසින් ප්රචලිත ව පවතී.
ශ්රී ලංකේය බතික් කලාවටත් දීර්ඝ ඉතිහාසයක් පවතී .දේශීයව සොයාගත් කොළ, මුල්, ගස්වල ගෙඩි, පොතුවලින් සාදාගත් වර්ණ යොදා ගනිමින් ගල් ලෙන්වල ඇඳි චිත්ර සේම එම වර්ණ යොදාගෙන නූල් වර්ණ ගන්වා රෙදි විවීම කළ බවද ඉතිහාසයේ සදහන් ය. කෙසේවෙතත්, අපේ පැරැන්නන් අතින් සුරැකී අද දක්වා පැවත එන ශ්රී ලාංකීය බතික් කලාවක් ලංකේය අපිට උරුමයකි .මේ උරුමය කලාවක් ලෙස නොනැසී පවත්වා ගැනිම උදෙසා පවතින්නා වූ අවහිරතා රැසකි. පුහුණු ශ්රමිකයන් අවම වීම , අමුද්රව්ය වල මිල ගනන් අධික වීම , නවීන තාක්ෂණය යොදා ගැනීම අවම වීම සේම නිශ්පාදනයට සරිලන වෙලදපලක් නොමැති වීම එම අවහිරතා අතර ප්රධාන තැනක් ගනී.. මෙම අවහිරතා මග හරවා ගතහොත් බතික් කලාව යනු ශ්රී ලංකාවේ ආර්ථිකය නගාලීමට ප්රමුඛව යොදා ගත හැකි කර්මාන්තය කි.
பண்டைய எகிப்தில் தோன்றிய மிகப் பழமையான வரலாற்றை கொண்ட ஒரு கலையே பத்திக் ஆகும். இது 2000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்டது மற்றும் 7ஆம் நூற்றாண்டில் பெர்சியா, சீனா , இந்தியா, ஜப்பான் மற்றும் தெற்காசிய மக்களிடையே பிரபல்யமடைந்திருந்தது.
ஜாவா தீவில் வசிக்கும் மக்களிடையே இந்த கலை இயற்கையுடன் இணக்கமாக இருந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. இன்றும் அவர்கள் இந்த பத்திக் தொழிலில் ஈடுபடுகின்றனர். பாரம்பரிய மெழுகு பத்திக் கலையின் அம்சங்களை வரைந்து அவர்களுக்கென்று தனித்துவமான ஒரு பத்திக் கலையை உருவாக்கினர். அது இன்று ஜாவா பத்திக் என்று மிகவும் பிரபல்யமாக அறியப்படுகிறது.
இலங்கையின் பத்திக் கலைக்கும் மிக நீண்ட ஒரு வரலாறு உள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் இலைகள், வேர்கள், காய்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட வண்ணங்களையே துணிகளை நெய்வதற்கும் பாறைகளில் வண்ணம் தீட்டுவதற்கும் அவர்கள் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. எவ்வாறாயினும், இலங்கையில் இதுவரை காலமும் எமது முன்னோர்கள் பேணி வந்த இத்தனித்துவமான கலையை நாம் மரபுரிமையாக பெற்றுள்ளோம். இப்பாரம்பரியத்தை ஒரு கலையாக பேணுவதில் பல தடைகள் உள்ளன. திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்களின் அதிக விலை , நவீன தொழில்நுட்பத்தின் குறைந்தபட்ச பயன்பாடு மற்றும் தயாரிப்புக்கான சந்தை பற்றாக்குறை ஆகியவை பத்திக் தொழிலில் எதிர்கொள்ளும் முக்கிய தடைகளாகும். இவ்வாறான தடைகளை முறியடிக்க முடிந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்த பயன்படும் முக்கிய தொழில்களில் ஒன்றாக பத்திக் திகழும்.
Comments
Post a Comment